Advertisement
GossipNewsPhotos
Trending

ரஜினி பட வில்லனுக்கு ஜோடியாகும் தமன்னா!

Advertisement

நடிகர் விஷாலுடன் தமன்னா நடித்த ’ஆக்சன்’ திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அவர் தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்றான ‘குவீன்’ ரீமேக் படமான ‘தட் இஸ் மகாலட்சுமி’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் பாலிவுட்டில் அவர் நடிக்கும் படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’காலா’ படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் தமன்னா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தமன்னா ஒரு சில இந்தி படங்களில் நடித்தபோதும் அந்தப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருப்பினும் ‘பாகுபலி’ வெற்றிக்கு பின் மீண்டும் அவருக்கு பாலிவுட் திரையுலகில் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில் தமன்னா, பாலிவுட்டிலும் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவாசுதீன் சித்திக், தமன்னா, கபீர்சிங், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தை ஷமாஸ் நவாப் சித்திக் இயக்கி வருகிறார்.

Ad
Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close