Advertisement
GossipNewsPhotos
Trending

நவம்பர் 22ல் வெளியாகும் ஸ்ருதிஹாசனின் ஹாலிவுட் படம்!

Advertisement

உலக நாயகன் கமல்ஹாசன் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன், கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது அவர் விஜய்சேதுபதியுடன் ‘லாபம்’ மற்றும் பாலிவுட் திரைப்படமான ‘பவர்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் டிம் கின் என்பவர் இயக்கவுள்ள அமெரிக்க தொலைக்காட்சி தொடர் ஒன்றிலும் ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  இந்த தொடரில் ஜெர்மி இர்வின், பிரையன் ஸ்மித், ஒமர் மெட்வால்லி உள்பட முன்னணி அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹாலிவுட்டில் வால்ட் டிஸ்னி தயாரித்திருக்கும் பிரமாண்டமான திரைப்படம் ‘Frozen II’. இந்த படம் தமிழ் உள்பட உலகின் பல மொழிகளில் வரும் 22ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படம் வசூலில் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலைய்ல் ‘Frozen II’படத்தின் முக்கிய கேரக்டரான ‘எல்சா’ என்ற கேரக்டரில் பிரபல நடிகை Idina Menzel’ நடித்துள்ள நிலையில் இவர் நடித்த ‘எல்சா’ கேரக்டருக்கு தமிழில் குரல் கொடுக்கின்றார் ஸ்ருதிஹாசன். இந்த செய்தியை வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ இந்தியாவின் சமூக வலைத்தளம் உறுதிசெய்துள்ளது. இதனையடுத்து ஸ்ருதிஹாசனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close